Freelancer / 2022 மார்ச் 26 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ஓஸ்டர்க் என்று 24 வயதான பெண்ணுக்கும் காலிப் என்பவருக்கும் 2 வயதுகளேயான 22 குழந்தைகள் உள்ளன என்று செய்தி வெளியாகியுள்ளது.
இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர் எனவும் இதற்காக அவர்கள் 195,000 டொலர்களை செலவு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலானது.
கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.
“நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான்“ என்று கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago