Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மார்ச் 07 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸ?க்கர் பெர்க், 25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும், முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், இம்மாதம் 5ஆம் திகதி மாலை, உலகம் முழுவதும் இந்த இரண்டு சமூக வலைத்தளங்களும் சில மணி நேரம் முடங்கியதால் பயனாளிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
இதனால், அவற்றை பயன்படுத்துபவர்கள், கருத்து பரிமாற்றம், புகைப்படம் மற்றும் காணொலி பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் இருந்தது.
அதைத் தொடர்ந்து, இந்த இரண்டு தளங்களிலும் உள்ள உள்நுழைவு சிக்கல்கள் குறித்து பயனாளிகள் புகார் அளித்தனர். பின்னர், சில மணி நேரத்திற்குப் பிறகு அதன் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
இந்த நிலையில், நேற்றைய அமெரிக்க பங்குச் சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது. இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் 25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago