2026 மே 14, வியாழக்கிழமை

dd

4ஆம் கட்டத் தடுப்பூசிக்கும் பச்சைக் கொடி

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு  4ஆம் கட்ட கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்த  இஸ்ரேல்  அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் அந்நாட்டிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் 4ஆம் கட்டத் தடுப்பூசியைச் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தற்போது பெரும்பாலான மக்களுக்கு 3 ஆம்  கட்டத் தடுப்பூசியாகப்  பூட்டர் செலுத்தப்பட்டு வருகின்றது.

 இந்நிலையில் அந்நாட்டில் தற்போது  4 ஆம் கட்டத் தடுப்பூசியையும் செலுத்துவதற்கும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் கருத்துத் தெரிவிக்கையில் ”தாமதிக்காமல் மக்கள் அனைவரும்  4ஆம் கட்டத் தடுப்பூசியைச்  செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .