Freelancer / 2025 மார்ச் 23 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டு அவரவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சட்டப் பாதுகாப்பை திரும்பப்பெற இருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதனால் இவர்கள் ஒரு மாதத்திற்குள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (a)
26 minute ago
33 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
2 hours ago
05 Nov 2025