Editorial / 2019 ஜனவரி 28 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் மேற்குப் பகுதியில், மனிதப் புதைகுழிகள் 50க்கும் மேற்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான குழுவொன்று தெரிவித்தது. பிராந்தியத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் இடம்பெற்றுவந்த பின்னணியிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ஐ.நா இணைந்த மனித உரிமைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் அப்டுல் அஸிஸ் தியோயே, மெய்-என்டொம்பே மாகாணத்திலுள்ள யும்பி என்ற பகுதியில், 50க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகளையும், அவற்றுக்கு மேலதிகமாக தனிநபர்களைக் கொண்ட புதைகுழிகளையும் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வளவுக்கு அதிகமான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை மூலம், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். புதைகுழிகளின் அளவைப் பொறுத்து, 5, 10 சடலங்கள் முதல், நூறு அல்லது அதன் 4 மடங்கு அளவான சடலங்கள் காணப்படலாமென அவர் தெரிவித்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மேற்கு கொங்கோவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஃபோல் சிகாப்வே, “படைவீரர்களையும் பொலிஸாரையும் அவர்கள் கொன்றுள்ளனர்” எனத் தெரிவித்தார். ஆனால், மேலதிகத் தகவல்களை அவர் வழங்கியிருக்கவில்லை.
முன்னதாக, இம்மாத ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்திருந்த ஐ.நா, சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, குறைந்தது 890 பேர் கொல்லப்பட்டிருந்தனர் எனத் தெரிவித்திருந்தது.
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025