Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 மார்ச் 09 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
53 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, 7 ஆண்டுகளாக நீடித்து வரும் தங்களது திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ள விடயமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான கேரி என்ற இளைஞரும் 77 வயதான அல்மெடா என்ற மூதாட்டியுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அல்மெடாவின் மகனின் இறுதிச்சடங்கில் கேரி பங்கேற்றதன் மூலமாக இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் இரண்டு வாரங்களிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் திருமணம் செய்து கொண்ட போது அல்மெடாவிற்கு வயது 71 என்பதும் கேரிக்கு 17 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை குறித்து இவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ”
பலரும் எங்களது உறவை கேவலமானதாகவும், தவறானதாகவும் அழைத்துள்ளனர். அதை எல்லாம் ஒருபோதும் நாங்கள் தடுக்க முயற்சித்தது கிடையாது.
எங்கள் இருவருக்குமான உறவு அற்புதமானது. நாங்கள் இருவரும் ஒன்றாகச் செலவிடும் ஒவ்வொரு நேரத்தையும் ரசிக்கின்றோம்” என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago