2026 மே 14, வியாழக்கிழமை

dd

6 மாதங்களில் 40 கிலோகிராம் எடை குறைத்த அமைச்சர்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 09 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஒருவர் கடந்த 6 மாதத்தில் 40 கிலோகிராம் எடையைக் குறைத்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்புக்கு வலதுகரமாக செயற்பட்டவருமான மைக் பாம்பியோவே இவ்வாறு தனது உடல் எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் ” 6 மாதங்களுக்கு முன்னர்  எனது உடல் எடையை அளவிட்டுப் பார்த்தேன்.இதன்போது  நான் 136 கிலோகிராம் நிறை இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் எனது உடல் நிறையை எப்படியாவது குறைத்து கட்டுக் கோப்பாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

இதனால் வீட்டிலேயே ஜிம் அமைக்க முடிவெடுத்து, எலிப்டிகல் மெஷின் ஒன்றையும், சில டம்பல்ஸ்களையும் வாங்கி, தினமும் பயிற்சி எடுத்தேன். அத்துடன் நானே உணவுக் கட்டுப்பாடு திட்டத்தை உருவாக்கி, அதை மிகுந்த ஒழுக்கத்துடன் கடைபிடித்தேன். வாரம் தோறும் எடை குறையக் குறைய எனக்கு உற்சாகம் ஏற்பட்டது.

ஒரு நாளைக்கு குறைந்த 30 நிமிடத்திற்கும் மேலாக உடற்பயிற்சி மேற்கொள்வேன். இதற்காக நான் எந்த பயிற்சியாளரையும் உதவிக்கு வைத்துக் கொள்ளவில்லை. எடை குறைப்பில் ஈடுபட ஆர்வம் உடையவர்கள், சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு மற்ற எந்த வழிகளை பின்பற்றினாலும் உரிய பலன் கிடைக்காது” என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .