2025 மே 17, சனிக்கிழமை

90 நாட்களுக்குள் தேர்தலை நடத்தவும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Editorial   / 2023 மார்ச் 01 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 90 நாட்களுக்கு தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண சபைகளுக்கான தேர்தலையே 90 நாட்களுக்குள் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் உச்ச நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளார்.  

 நீதியரசர் உமர் அத்தா பண்டியல் தலைமையிலான ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (01) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

 பாகிஸ்தானில் மாநிலத் தேர்தல்கள் நடத்த போதிய பணம் இல்லை என்று நிதி அமைச்சு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததால், மாநிலத் தேர்தல்கள் தொடர்ந்து தாமதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .