2021 ஜூன் 16, புதன்கிழமை

சம்பியனாகியது சங்கானை கிங்ஸ்ரார்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

கஜேந்திரன் ஞாபகார்த்தமாக “ராஜா” வெற்றிக்கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட மென்பந்தாட்ட துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் சங்கானை கிங்ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டி அணிக்கு 7 பேர் கொண்ட 6 ஓவர்களைக் கொண்ட போட்டியாக ஆனைக்கோட்டை யூனியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின.

இறுதிப்போட்டி, 10 ஓவர்களைக் கொண்ட 11 பேர் பங்குபற்றும் போட்டியாக நடைபெற்றது. இதில் சங்கானை கிங்ஸ்ரார்ஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை வராகி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் சென்ற கிங்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது. 73 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய வராகி அணியினர் 10 ஓவர்கள் நிறையில் 8 விக்கெட்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றனர்.

சம்பியனாகிய அணிக்கு 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் பணப்பரிசிலும் கேடயங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .