Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரிக்கும் மடவளை மதீனா தேசிய கல்லூரிக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மடவளை மதீனா மத்திய கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மதீனா தேசிய கல்லூரி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்; இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரிபாஸ் ரஸ்மி 75 ஓட்டங்களையும், எஸ்.சுகைல் 67 ஓட்டங்களையும் எம்.எம்.மனாஸிர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி 43 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி வீரர் சப்ராஸ் சிறந்த பந்து காப்பாளராகவும் மதீனா தேசிய கல்லூரி வீரர்களான மனாஸிர் சிறந்த பந்து வீச்சாளராகவும் எம்.எஸ்.எம்.சுகைல் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் எம்.ஐ.ரிபாஸ் ஆட்ட நாயகனாகவும் தெரிவாகினர்.
போட்டி முடிவில் மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.பி.சமரக்கோன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.
7 minute ago
12 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
39 minute ago