2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் கால்பந்தாட்டப் போட்டி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சுற்றுப்போட்டி  திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிநிலைச் சுற்றில் பங்குகொள்கின்றன. 21 மாவட்ட அணிகள் பங்குகொள்ளும் இச்சுற்றுப்போட்டியில் மாவட்டங்கள் 7 குழுக்களாக பிரித்து லீக்முறையில் ஆரம்ப சுற்றில் பங்குகொள்கின்றன.

நாளை  இச்சுற்றில் வெற்றி பெறும் அணிகள் விலகல் முறையில் பங்குகொள்ளும்.  இறுதிப் போட்டி நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு  மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெறும்.   ஆரம்ப நிகழ்வுகளில் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை பிரதம அதிதியாகவும் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராசா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .