2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து

R.Tharaniya   / 2025 நவம்பர் 02 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளின் முடிவில் 2-0 என நியூஸிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி  வெலிங்டனில் சனிக்கிழமை (01) நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில், இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 222 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.நியூஸிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 44.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களைச்  சேர்த்து வெற்றி கண்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X