2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இரண்டாவது சுற்றில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்டு வரும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.

இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் 24 கழகங்கள் பங்குபற்றும் இத்தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியொன்றில் மன்னார் கில்லறி விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X