குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின், பெண்களுக்கான கபடிப் போட்டியில், யாழ். மாவட்ட பெண்கள் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மேற்படி கபடிச் சுற்றுப் போட்டியானது, அநுராதபுரத்தில், நேற்று முன்தினம் (16), நேற்று (17) நடைபெற்றது.
இதில், யாழ். மாவட்ட பெண்கள் அணி, அபார திறமையை வெளிப்படுத்தி, ஆரம்பச் சுற்றுப் போட்டிகளை வெற்றிகொண்டு, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டியில், பதுளை மாவட்ட அணியுடன் யாழ். மாவட்ட அணி மோதியது. இதில், யாழ். மாவட்ட பெண்கள் அணி, 56-16 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில், கபடிப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago