2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு ஆசிர்வாதம்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையான Savate குத்துச்சண்டை போட்டியில் பாகிஸ்தான் லாகூரில் சென்று பதக்கங்களை வென்று வந்த இலங்கை வீர, வீராங்கனைகளுக்கான ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு கொலன்னாவ ரஜமகா விகாரையில் தலைமை பெளத்த விகாராதிபதியின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கண்டி மாவட்டப் பணிப்பாளர் முஹமட் இஃதிஸான்  மற்றும் கொழும்பு, கம்பஹா மாவட்டப் பணிப்பாளர் நசார் ஏ. காமில் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களான டில்ஷாத், ஷாகிர் ஹுஸைன் மற்றும் மத்திய மாகாண வை.எம்.எம்.ஏ அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .