R.Tharaniya / 2025 ஜூலை 13 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவில் இறுதி விழா சனிக்கிழமை (12) அன்று மதியம் 2:30 மணியளவில் விருந்தினர்களை வரவேற்புடன் மைதானம் முன்றலில் ஆரம்பமானது .
முதலில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் பின் விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் அக வணக்கம் என்பன இடம்பெற்றன.
பின்னர் வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினருக்கும் தாழையடி சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தினருக்கும் நட்பு ரீதியான சிறிய உதை பந்தாட்ட போட்டி இடம்பெற்றது .
தொடர்ந்து வடமராட்சி கிழக்கு உதை பந்தாட்ட கழகங்கழுக்கிடையிலே நடைபெற்ற உதை பந்தாட்ட இறுதிப் போட்டியான அருணோதயா அணியினரை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணியினர் மோதினர் பலத்த போட்டியின் மத்தியில் உதயசூரியன் கிண்ணத்தினை 2:0 என்ற கோல் கணக்கில் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தினர் தமதாக்கிக் கொண்டனர்.
இறுதி விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அவர்களும் மற்றும் கௌரா விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .



29 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
22 Dec 2025