Shanmugan Murugavel / 2021 மார்ச் 11 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எல்.எஸ்.டீன், நூருல் ஹுதா உமர்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில, நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பிரதேச செயலகத்துக்கு ஒரு மைதான அபிவிருத்தி எனும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச சபை அதாஉல்லாஹ் விளையாட்டு மைதானத்தின் கரப்பந்தாட்டத் திடலை அபிவிருத்தி செய்யும் நிகழ்வானது, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகியால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ். ரஸான், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டுக் கழக வீரர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
40 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
56 minute ago
2 hours ago