Freelancer / 2023 மே 14 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

'Shotokan Karate Academy International' கலையகத்தின் மத்திய மாகாண கிளையின் கராட்டி சுற்றுப் போட்டிகளும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் பொகவந்தலாவை ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று (13.05.2023) நடைபெற்றது.
Shotokan Karate Academy International தலைமையகத்தின் பிரதம ஆசிரியர் சிகான். அன்ரோ டினேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.
இந்த மத்திய மாகாண கராட்டி சுற்றுப் போட்டியில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நினைவுப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது



17 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
41 minute ago
2 hours ago