Shanmugan Murugavel / 2026 ஜனவரி 06 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு விபுலானந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடினபந்து கிரிக்கெட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (05) அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதில் சுமார் 5 இலட்சம் ரூபாய்க்கு மேலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காரைதீவு விளையாட்டுக்கழகம், விவேகானந்தா விளையாட்டுக்கழகம், ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான மூன்று பாய்களே இவ்விதம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜயரத்ன மைதானத்துக்குச் சென்றுபார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
10 minute ago
49 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
49 minute ago
3 hours ago
6 hours ago