R.Tharaniya / 2025 ஜூலை 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்த மருது ஓ.ஜி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், மர்ஹூம் மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (04) அன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டஇளைஞர் அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இந்த இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட்பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹீர்,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் அதிகாரசபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹீர்,கட்சியின் பிரதி செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், உயர்பீட உறுப்பினரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம்,கட்சியின் மாவட்டசெயற் குழு செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம். காதர், உயர்பீட உறுப்பினர் எஸ்.ஹமீட் ஆகியோருடன் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






13 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
28 minute ago