Mithuna / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
வடக்கின் நீலங்களின் சமர் என்றழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரிகளுக்கிடையிலான 12ஆவது மோதலில் மத்திய கல்லூரி வென்றது.
தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களையே பெற்றது. அந்தவகையில் பொலோ ஒன் முறையில் தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதுவரை நடந்த 12 போட்டிகளில் இந்துக் கல்லூரி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன், மத்திய கல்லூரி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஐந்து போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருக்கிறது.
4 hours ago
9 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
08 Feb 2026