Shanmugan Murugavel / 2026 மே 12 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எச்.எம். சியாஜ்

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் எம்.ஆர்.எம். பஸ்ஹான், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சம்பியனாகியுள்ளார்.
5,000 மீற்றர், 1,500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஆகிய ஓட்டங்கள் மூன்றிலும் முதலாமிடத்தைப் பெற்று பஸ்ஹான் சம்பியனாகியிருந்தார்.

மேலும் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் எம்.ஜே.எம் ஜஹித் முதலிடத்தையும், வை.எம் யாசித் இரண்டாமிடத்தையும் மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்றதுடன், 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வை யுஸ்ரா இரண்டாமிடத்தையும் 12 வயது பிரிவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் எம்.என்.எம் சிமாக் மூன்றாமிடத்தையும் பெற்று வலய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் எம்.ஜீ. லுக்மான் ஹகீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் எம்.என்.எம். அர்ஷாத்துக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் ஆகியோர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஹகீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago