குணசேகரன் சுரேன் / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}


மல்லாகம் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட தாச்சித் தொடரில், ஆண்களில் மயிலிட்டி வள்ளுவர் அணியும் பெண்களில் மல்லாகம் ஸ்ரீ முருகன் அணியும் சம்பியனாகின.
மேற்படி தொடரானது ஶ்ரீ முருகன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், மயிலிட்டி வள்ளுவர் அணியை எதிர்த்து மயிலிட்டி வானவில் அணி மோதியது. இதில் இலகுவான வழிகளில் தொடர்ச்சியாக பழங்களைப் பெற்று, 12-01 என்ற பழங்கள் அடிப்படையில் வள்ளுவர் அணி சம்பியனாகியது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில் மயிலிட்டி பாரதி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மல்லாகம் ஸ்ரீ முருகன் அணியை எதிர்த்து சாளம்பை விளையாட்டுக் கழக அணி மோதியது. இதில் ஸ்ரீ முருகன் அணி, 4-1 என்ற பழங்கள் அடிப்படையில் வென்றது.
13 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
2 hours ago