2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சம்பியனாகியது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி

Editorial   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி சம்பியனனானது.

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தை வீழ்த்தியே உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி சம்பியனானது.

இறுதிப் போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, 21-15, 21-17 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.

இக்கடற்கரை கரப்பந்தாட்டத்தில் மூன்றாமிடத்தை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X