Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் வித்தியாலயத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக பழைய மாணவர் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு எழுவர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில் சி. ஆர் 7 சம்பியனானது.
கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்றற இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி அணியை வென்றே சி. ஆர் 7 அணி சம்பியனானது.

சம்பியனான சி. ஆர் 7 அணிக்கு வெற்றிக் கிண்ணமும், 30,000 ரூபாய் பணப் பரிசும், இரண்டாமிடத்தைப் பெற்ற சிற்றி அணிக்கு கிண்ணமும் 15,000 ரூபாய் பணப் பரிசும் அதிதிகளால் வழங்கப்பட்டன.
போட்டி நிகழ்வுகளின் மூலம் பெறப்பட்ட சுமார் 80,000 ரூபாய் நிதி பழைய மாணவர் அமைப்புக்களால் பாடசாலை அபிவிருத்திக்காக அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026