Shanmugan Murugavel / 2021 மார்ச் 02 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்
சீன-இலங்கை நட்புறவுக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், பத்தரமுல்ல கால்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.
கொழும்பு ரட்ணம் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்றே பத்ரமுல்ல கால்பந்தாட்டக் கழகம் சம்பியனாகி, 150,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றிருந்தது.
சீன, இலங்கை நட்புறவின் அடையாளமாக எட்டாவது வருடமாகவும் அளுத்கட இளைஞர் கழகம் மற்றும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் மௌலவி ஐ.எம். முகம்மட் மிப்லால் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 முன்னணி கால்பந்தாட்டக் கழகங்கள் மோதியிருந்த இத்தொடரானது 16 போட்டிகளைக் கொண்டதாக வடிவைக்கப்பட்டிருந்தது.
இத்தொடரில், மூன்றாம், நான்காமிடங்களை மாளிகாவத்தை, பீற்றர்சன் விளையாட்டுக் கழகங்கள் பெற்றுக்கொண்டன.
தொடரின் சிறந்த வீரராக சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர் கிஸாந்தவும், சிறந்த கோல் காப்பாளராக அதே கழகத்தைச் சேர்ந்த அந்தோனியும், இறுதி போட்டியின் நாயகனாக பத்தரமுல்ல கால்பந்தாட்ட கழக வீரர் ஜீ.எப். லப்ரோய்யும் தெரிவாகினர்.
42 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago