Shanmugan Murugavel / 2021 மார்ச் 21 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் வீரர்களிக்கிடையே நடைபெற்ற கடினபந்து கிரிக்கெட் தொடரில் றைஸ்டார் யுனைட்டெட் சம்பியனாகியது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் றைஸ்டார் கிங்டும்மை வென்றே றைஸ்டார் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யுனைட்டெட், 25 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்டும், 25 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களையே பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பாலமுனை றைஸ்டார் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜூபான் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கிழக்கு மாகாண வீடமைப்பு சபையின் உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா, கழகத்தின் ஆலோசகர்களான அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் விடுதி அத்தியட்சகர் ஆர். றகுமத்துல்லா, பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர் கே.எல். உபைதுல்லா, கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இப்ராஹிம், றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவரும், றக்பி பயிற்றுவிப்பாளருமான ஐ.எல்.எம். பாயிஸ், அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளர் எம்.எப். பர்ஹான், கழகத்தின் செயலாளர் அஸ்ரி அஸாம் உட்பட கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
8 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago