2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சர்வதேச ’’பங்கபந்து’’ கபடிப் போட்டியில் நிந்தவூரைச் சேர்ந்த இருவர்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 15 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

2022 சர்வதேச "பங்கபந்து" போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

"பங்கபந்து" கபடிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணிக்கான தெரிவானது, கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதில், மதீனா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்களான அஸ்லம் சஜா மற்றும் முஹம்மட் ஷபிஹான் ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு தெரிவு செய்ய பட்டுள்ளனர்.

இப்போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் எதிர்வரும் நாளை மறுதினம் முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இப்போட்டியில் பங்களாதேஷ், இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .