Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 29 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கதிரவன்
உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஆதரவில், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த திருகோணமலை மாவட்டத்துக்கான பூப்பந்தாட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மக்கேசர் உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.
10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒற்றையர் போட்டியும், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இரட்டையர் போட்டியும், 12, 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒற்றையர் போட்டியும், ஆண்கள், பெண்களுக்கு திறந்த ஒற்றையர் போட்டியும், இரட்டையர் போட்டியும், ஆண்கள், பெண்கள் இணைந்த கலப்பு போட்டியுமாக 13 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 15 பேர் பங்கு கொண்டு இருந்தார்கள்.
திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சு. ஜெயசங்கர் தலைமையில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை திருகோணமலை நகர சபை தலைவர் நா. இராஜநாயகம், கடந்த வெள்ளிகிழமை தொடக்கி வைத்ததிருந்த நிலையில் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நா. இராஜநாயகம், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தனர்.
முடிவுகள் பின்வருமாறு;
10 வயதுக்குட்பட்ட ஆண்கள்
12 வயதுக்குட்பட்ட ஆண்கள்
12 வயதுக்குட்பட்ட பெண்கள்
14 வயதுக்குட்பட்ட ஆண்கள்
14 வயது பெண்கள்
16 வயதுக்குட்பட்ட ஆண்கள்
18 வயதுக்குட்பட்ட ஆண்கள்
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர்
திறந்த போட்டி ஆண்கள்
திறந்த போட்டி பெண்கள்
திறந்த போட்டி ஆண்கள் இரட்டையர்
திறந்த போட்டி பெண்கள் இரட்டையர்
கலப்பு இரட்டையர்
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago