2021 ஜூலை 31, சனிக்கிழமை

பிசிசிஐயின் சிறந்த வீரர், வீராங்கனை விருது

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) 2018/19ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக பூனம் யாதவ்வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2006-07 ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு  பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறன.

இதில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீகாந்த், தேர்வுத் குழு தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அஞ்சும் ஜோப்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக் குரியவர் ஆவார்.

இந்த நிலையில், வருடத்தின் சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிறந்த சர்வதேச வீராங்கனைக்கான விருது சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டி களில் தனது முத்திரையை பதித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .