2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

பெண்களுக்கான கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு பயிற்சி செயலமர்வு

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 24 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ. சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி செயலமர்வு கல்லடியில் அண்மையில் நடைபெற்றது.

மட்டுவில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி வலுவூட்டுவதற்காக செரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

மண்முனை வடக்கு, வாழைச்சேனை, செங்கலடி, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 10 சிறுவர் கழகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு பிரிவினர், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் அதிகாரிகளுக்கும் இந் நிகழ்வில் பயிற்சி வழங்கப்பட்டுவருகின்றது.

கிரிக்கெட் விளையாட்டின் துடுப்பாட்ட நுட்ப முறைகள் மற்றும் துடுப்பாட்ட பயிற்சி, வேகப்பந்து, சுழல் பந்து முறைகள் பற்றியும் களத்தடுப்பாட்ட நுட்பங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பி.கே. அன்வர்டின் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சபையின் முதலாம் தர பயிற்று விப்பாளர் கே. சகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .