2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பாபர் அசம் சாதனை

R.Tharaniya   / 2025 நவம்பர் 02 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லாகூரில் வௌ்ளிக்கிழமை (31) நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தின்போது பாபர் அசம் 11 ஓட்டங்களை சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை  எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

தற்போது 4,234 ஓட்டங்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 4231 ஓட்டங்களுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X