2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பார்வையாளர் அரங்குக்கு அடிக்கல் நாட்டல்

எஸ்.கார்த்திகேசு   / 2019 மே 27 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில், திருக்கோவில் -3-இல் அமைந்துள்ள குட்னிக் விளையாட்டு கழகத்துக்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிகக்கல்லை நாட்டி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இவி. கமலராஜன், பிரதேச சபை உறுப்பினர்களான கே. சதீஸ்குமார், எஸ். ஸ்ரீகந்தராசா, குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எஸ். ரமேஷ், பொருளாளர் பி. பரமானந்தம், கழகத்தின் ஆலோசகர் தி. சுகிர்தராஜன், அரச அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், கழகத்தின் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தர்.   

குட்னிக் விளையாட்டுக் கழகம் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் கழகத்துக்காக மைதானம் உட்பட பார்வையாளர் அரங்கு என்பன அமைக்கப்படாது பின்தங்கிய நிலையில் காணப்பட்டது.இந்நிலையில் கடந்தாண்டு மைதான புனரமைப்புக்கான நிதியை ஓதுக்கீடு செய்து மைதானத்தை புனரமைத்து கொடுத்ததுடன், தற்போது பார்வையாளர் அரங்கு ஒன்றை அமைப்பதற்காக ஒரு மில்லியன் ரூபா நிதியை கவீந்திரன் கோடீஸ்வரன் ஒதுக்கீடு செய்திருந்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .