Shanmugan Murugavel / 2025 ஜூன் 25 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்று வரும் வலய மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகளில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதலில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.பி. எம். ஜெசீன் தெரிவித்தார்.
தரம் 11-இல் கல்வி பயிலும் ஆர்.ரீஹா 18 வயதின் கீழ் ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியிலும், தரம் 12-இல் கல்வி பயிலும் எம்.எப். நப்ரினா 20 வயதின் கீழ் ஈட்டி எறிதலிலும் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களான எஸ். ஐ.எம். அம்ஜத், எம். அஹ்சப் ஆகிய இருவருக்கும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் சார்பாக தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக ஜெசீன் மேலும் குறிப்பிட்டார்.
12 minute ago
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
46 minute ago