R.Tharaniya / 2025 மே 13 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யா/ யூனியன் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகிய மறைந்த திருமதி. ஜெயந்தி ஜெயதரன் அவர்களின் ஞாபகார்த்தமாக யூனியன் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் (legend lady JeyanthyQueen cup 2025) எனும் மாபெரும் வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது12 மற்றும் 13 ஆம் திகதிகளில் யா/யூனியன் கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக நடாத்தப்படுகின்றது.
இச் சுற்றுப் போட்டியானது (Open Girls, Over 35 Girls, Mixed )ஆகிய பிரிவினருக்குரிய போட்டிகளாக 12/13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களின் வயது பிரிவினருக்கான போட்டிகள் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இன்றைய நிகழ்வின் போது விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கொடி மற்றும் கழக கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. பின்னர் வலைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகின. வடக்கு மாகாண ரீதியாக நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன், சுறுசுறுப்புடனும் போட்டியில் பங்குபற்றுவதை அவதானிக்க முடிந்தது.





1 hours ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
8 hours ago