2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ரேஸ் கரத்தையில் வென்ற நாசிக்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ரெக்லா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மாட்டு வண்டில் போட்டிகளில் ரேஸ் கரத்தையில் நாசிக் முதலிடம் பெற்றார்.   

பாரம்பரியமான இந்த விளையாட்டுப் போட்டிகள் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில்,  இஜ்திமா மைதானத்தில் இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற நிலையில் ரேஸ் கரத்தையில்  இரண்டாமிடத்தை ப்ரசன்னா, மூன்றாமிடத்தை வாரிஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள், மாட்டுரிமையாளர்கள் மற்றும் இதர வாலிபர்களை உள்ளடக்கிய ரெக்லா என்கின்ற இந்த விளையாட்டு கழகத்தினர், ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை தீர்த்து வைக்கும் நோக்கத்தில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்ற நிலையில் அரை கரத்தையில் முதலாமிடத்தை இசுமி, இரண்டாமிடத்தை இஸ்கார், மூன்றாமிடத்தை வாரிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து தெரிவு போட்டிகள் நடைபெற்று இறுதிப் போட்டிகளே  வெள்ளியன்று  நடைபெற்ற நிலையில் ரேஸ் கரத்தை திறந்த  போட்டியில் முதலாமிடத்தை நாசிக், இரண்டாமிடத்தை அபான், மூன்றாமிடத்தை  அஜித் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
டயர் கரத்தை போட்டியில் முதலாமிடத்தை நாசிக், இரண்டாமிடத்தை  ராசித், மூன்றாமிடத்தை ரியாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


நிர்வாகக் குழுவினர்களுக்கிடையிலான போட்டியில் முதலாமிடத்தை  ஜனார்தன், இரண்டாமிடத்தை அமித, மூன்றாமிடத்தை ரிஸ்வான் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
குதிரயோட்டப் போட்டியில் முதலாமிடத்தை ரினாஸ், இரண்டாமிடத்தை இஸ்கார், மூன்றாமிடத்தை சாஹிர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .