Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 22 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8,9 ல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி. அ. நயோலின் அப்றியானா மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், மஹரகம ஜனாதிபதி கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
அவருக்கு சான்றிதழ் கல்வி அமைச்சில் வெள்ளிக்கிழமை (20) அன்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன ( Dr .Madhura Senevirathna) அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டு இரண்டாம் நிலைகளைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வடமாகாண மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையிலான தரப்படுத்தல் வரிசையில் வட மாகாண மாணவர்கள் வடமாகாணத்திற்கு முதல் இடத்தைப் பெற்றுக் கொடுத்தது பெருமைக்குரிய விடயம் ஆகும்.
எஸ்.ஆர்.லெம்பேட்
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago