2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் அணி வெற்றி

Super User   / 2014 ஜூலை 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    வி.விஜயவாசகன்


சாவகச்சேரி டிறிபேக் பழைய மாணவர் அணிக்கும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ துடுப்பாட்டப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் அணி 4 இலக்குகளால் வெற்றிபெற்றது.

மேற்படி போட்டி ஞாயிற்றுக்கிழமை (13) ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது,

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி டிறிபேக் அணி 46.4 பந்துபரிமாற்றங்களில் 230 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் என்.நிலான் 31, எம்.பிரதாபன் 38, எஸ்.ஹரிகரன் 30, எம்.லக்சன் 32 கே.கோபி 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிக் கல்லூரி அணி 44.5 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.ஹரி 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .