Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Administrator / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்கட் கழகம் ஏற்பாடு செய்துள்ள ட்ரகன்ஸ் ப்ரிமியர் லீக் இரண்டாம் பாகம் கிரிக்கட் போட்டி தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13 ) புத்தளத்தில் மிக கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அணிக்கு 11 பேரை கொண்ட 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி தொடரில் 17 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று நொக்கவுட் முறையிலுமாக மொத்தமாக 136 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. போட்டிகள் யாவும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
சம்பியனாகும் அணிக்கு 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் ரனரப் அணிக்கு 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் மூன்றாம் இடம்பெறும் அணிக்கு 5 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் வழங்கப்படவுள்ளதோடு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளதாக ட்ரகன்ஸ் கிரிக்கட் கழக செயலாளர் எம்.ஆர்.எம். தன்ஸீல் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago