George / 2015 மார்ச் 10 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-குணசேகரன் சுரேன்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம், யாழ். மாவட்ட ரீதியில் நடத்தும் 'யாழ்ப்பாணம் சலன்ஜர்ஸ் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி சுப்பர் - 8 சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(08) நடைபெற்ற சுப்பர் 8 சுற்றுக்கான தகுதிகாண் போட்டியொன்றில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சென்.மேரிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் சென்.மேரிஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
முன்னதாக, இரண்டாம் சுற்றுக்கான இரண்டு போட்டிகள் கடந்த சனிக்கிழமை (07) நடைபெற்றன. முதற்போட்டியில் மனோகரா விளையாட்டு கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதியது. இதில் விண்மீன் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் சண்டில் நக்கீரன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை கலைமதி விளையாட்டுக்கழக அணி மோதியது. இதில் கலைமதி அணி 9:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியீட்டியது.
.jpg)
.jpg)
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago