Thipaan / 2015 மார்ச் 11 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
திகோ. பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 249 புள்ளிகளைப் பெற்று விபுலானந்தர் இல்லம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, பாடசாலை அதிபர் டீ.உதயகுமார் தலைமையில் பாடசாலை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் 249 புள்ளிகளைப் பெற்று விபுலாநந்தர் இல்லம் முதலாம் இடத்தையும் 247 புள்ளிகளைப் பெற்று நாவலர் இல்லம் இரண்டாம் இடத்தையும் 203 புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதேவேளை நாவலர், வள்ளுவர், விபுலாநந்தர் ஆகிய இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான அணி நடை வகுப்புப் போட்டியில் நாவலர் இல்லம் முதலாம் இடத்தையும், விபுலாநந்தர் இல்லம் இரண்டாம் இடத்தையும், வள்ளுவர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
அதேவேளை, பெண்களுக்காண அணி நடை வகுப்புப் போட்டியில் நாவலர் இல்லம் முதலாம் இடத்தையும், வள்ளுவர் இல்லம் இரண்டாம் இடத்தையும் விபுலாநந்தர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
அதேபோல் அதிதிகளினால் பார்வையிடப்பட்ட இல்லங்களுக்கான இடப்பிடிப்புக்களில் நாவலர் இல்லம் முதலாம் இடத்தையும், விபுலாநந்தர் இல்லம் இரண்டாம் இடத்தையும், வள்ளுவர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.அருலம்பலம், திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சீ.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக பொத்துவில் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன், இலங்கை வங்கி முகாமையாளர், அல்-இர்பான் மகளிர் கல்லூரி அதிபர் ஏ.எல்.கமறுதீன், பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் ஏ.எம்.றபீக், மதப்பெரியார்கள், கிராம சேவையாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago