Gavitha / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு புதன்கிழமை (08) பாடசாலையின் அதிபர் ச.வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.குணலிங்கம், கௌரவ அதிதிகளாக ஆரம்ப பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் யோ.கோபாலரெத்தினம், ஏ.சி.எம். லங்கா மாவட்ட இணைப்பாளர் த.ரஜனிகாந் அத்துடன் அண்மித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வில் பாடசாலை மாணவர்களினால் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், நடைபெற்ற விளையாட்டுகளில் பாடசாலைகள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் சிறப்பான முறையில் போட்டிகளில் கலந்துகொண்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்குரிய பரிசில்களை நிகழ்வுக்கு கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.
படுவான்கரையைப் பொறுத்தவரையில் பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகளுடன் காணப்படும் பாடசாலைகள் தற்பொழுதும் இயங்கிவருகின்றது. அந்த வகையில் படுவான்கரையைப் பொறுத்தவரையில் 13 பாடசாலைகள் இருந்தும் பாடசாலைகளில் பிள்ளைகளின் வீதம் குறைவாகவே காணப்படுவதாகவும் இதற்கான பல காரணம் உள்ள நிலையில் பிள்ளைகளின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சி காரணமாக மாணவர்களின் பாடசாலை சேரும் தொகை குறைவாக காணப்படுவதாகவும் நகர பாடசாலைகளை நாடுதல், மக்களின் குடிபெயர்வு மற்றும் பல்வேறுபட்ட காரணங்களை தெரிவிக்கின்றனர்.

13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago