Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ்.மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட ஹொக்கி அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் ஹொக்கிச் சுற்றுப்போட்டியின் முதற்சுற்று ஆட்டங்களில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும் நியூ ஸ்ரார்ஸ் அணியும் வெற்றிபெற்றன.
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 10 அணிகள் பங்குபற்றும் ஹொக்கிச் சுற்றுப்போட்டியானது, சென்.ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானங்களில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற போட்டியொன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து மல்லாகம் நியூவாரியர்ஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றன. இரண்டாவது பாதியாட்டத்தில் பல்கலைக்கழக அணி 2 கோல்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது. பல்கலைக்கழக அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற போட்டியில் தெல்லிப்பளை மகாஜனன்ஸ் அணியும் யாழ்ப்பாணம் நியூ ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. போட்;டி ஆரம்பித்த நிமிடம் தொடக்கம் நியூ ஸ்ரார்ஸ் அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற அவ்வணி முதற்பாதியாட்டத்தில் 3 கோல்களை போட்டது.
இரண்டாவது பாதியாட்டத்திலும் அதே உற்சாகத்துடன் ஆடிய நியூ ஸ்ரார்ஸ் அணி, மேலும் 3 கோல்களைப் போட்டு, தமது வெற்றியை உறுதி செய்தது. நியூ ஸ்ரார்ஸ் அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago