George / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நாடத்தும் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின், அக்கரைப்பற்று லீக் கழகங்களுக்கிடையிலான லீக் போட்டியில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம், வெற்றி பெற்றது.
இறக்காமம் விளையாட்டுக் கழக கால்பந்தாட்ட அணிக்கும், சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக அணிக்குமிடையிலான போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை(17) அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப்போட்டியில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சுப்பர் சொனிக் அணியினர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல். அப்துல் பத்தாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். அப்துல் முனாப், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம். றஸீன், அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ், அக்கரைப்பற்று லீக் செயலாளர் எம். பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல். தவத்தின் ஊடக செயலாளர் எம்.ஐ.எம். றியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சுப்பர் சொனிக் கழகத்தில் திறமையை வெளிக்காட்டி, ஆசிரியர் பயிற்சிக்காக தேசிய கல்விக் கல்லூரிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட கழக உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
2 hours ago