Thipaan / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் மிக பழைமை வாய்ந்த அணியும் நீண்ட காலம் பிரகாசிக்க தவறி இருந்த அணியுமான புத்தளம் போல்டன் கால்பந்தாட்ட கழகம், புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடரில் முன்னகர்ந்துள்ளது.
புத்தளம் லீக்கின் மிகப்பலம் வாய்ந்த அணியான கற்பிட்டி பேர்ல்ஸ் அணியை 03 : 02 கோல்களினால் வீழ்த்தியதன் மூலமே 03 புள்ளிகளோடு போல்டன் அணி முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இப் போட்டி, புத்தளம் ஸாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (25) மாலைஇடம்பெற்றது.
போட்டி ஆரம்பித்து 23 ஆவது நிமிடங்களுக்குள் இந்த 05 கோல்களும் அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர கற்பிட்டி பேர்ல்ஸ் அணியினர் சார்பாக கோல் ஒன்றினை போல்டனுக்கு பெற்றுக்கொடுத்ததும் போல்டன் அணியின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்து விட்டது.
போல்டன் அணிக்காக இஸ்ராக், இஹ்லாக் ஆகியோரும், கற்பிட்டி பேர்ல்ஸ் அணிக்காக அல்தாபும் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம். கியாஸ், எம்.ஓ.எம். ஜாகீர், எச்.எச். ஹம்ருசைன் ஆகியோர் கடமையாற்றினர்.
11 minute ago
15 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
42 minute ago
3 hours ago