Kogilavani / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 'ஏ' பிரிவுக் கழகங்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி, மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (2) ஆரம்பமாகவுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இயங்கும் 'நம்பிக்கை ஒளி' எனும் தாயக அமைப்பின் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் அனுசரணையில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் மாநகர மண்டபத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்றது.
மாபெரும் லீக் முறையிலான சுற்றுப்போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாநகரசபைக்குட்பட்ட 9 அணிகளும் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணியுமாக 10 அணிகள் பங்குபற்றவுள்ளன.
முதலாமிடத்தைப் பெறும் அணிக்கு ரூபாய் 100,000 மற்றும் வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபாய் 50,000 மற்றும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படவுள்ளதாக இச்சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில், இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.சிவகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்க தலைவர் எஸ்.உதயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


25 Apr 2026
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Apr 2026
25 Apr 2026