Thipaan / 2015 மே 02 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சசிக்குமார்
செவிப்புலன் வலுவற்றோருக்கான விளையாட்டு விழா யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (02) நடைபெறுகின்றது.
இவ்விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு. வவுனியா மாவட்டங்களைச் சேரந்த செவிப்புலனற்றவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
மென்பந்து கிரிக்கெட், கால்பந்து. கரப்பந்து. மெய்வல்லுநர் போட்டிகள் இதன்போது நடைபெறவுள்ளன.
திருகோணமலை மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் வீரர்கள் இப்போட்டியில் பங்கு கொள்வதை உற்சாகப்படுத்தும் முகமாக இலங்கை வங்கியின் கிழக்கு பிராந்திய அலுவலகத்தினால் ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் அனந்தநடேசன் நிறுவனத்தின் ஆலோசகர் தம்பு பாலசுப்பிரமணியத்திடம் இவ் உபகரணங்களை கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .