Thipaan / 2015 மே 02 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 44 புள்ளிகளைப் பெற்று 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனானது.
சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நாள் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றன.
சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.றஜாய் தலைமையில் இடம்பெற்ற இவ் இறுதி நாள் போட்டி நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். அமீர்; அலி, ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.நபார், தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்பயிற்சி போதனாசிரியர் ஐ.எம்.கடாபி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவில் 9 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. இதில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 44 புள்ளிகளைப் பெற்று சாய்ந்தமருது பிரதேச செயலக 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனானது.
பிளைங் கோர்ஸ் விளையாட்டுக் கழகம் 34 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தையும் பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 15 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இவ் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்கள் மற்றும் வீரர்களுக்காக கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

44 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
2 hours ago