Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 04 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ்
நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி, வெற்றி பெற்றது.
அட்டாளைச்சேனை அஸ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டன. அட்டாளைச்சேனை சோபர் அணியும் பொத்துவில் றொக் சலன்ஜஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
அணிக்கு 06 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சோபர் அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடப்பெடுத்தாடிய பொத்துவில் றொக் சலன்ஜஸ் அணியினர் 40 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தனர்.
போட்டியின் ஆட்டநாயனாக சோபர் அணியினைச் சேர்ந்த ஏ.எம்.எம்.அமீஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் சுற்றுப் போட்டியின் சம்பியனாக சோபர் அணி தெரிவானது.
அம்பாறை மாவட்ட இளைஞர் அதிகாரி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், தயாகமகே, அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களின் உப தலைவர் யூ.எல்.எம்.சபீர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago