Princiya Dixci / 2015 மே 20 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
அக்கரைப்பற்று ஹபிபியா விளையாட்டுக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று ஹபிபியா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
ஹபிபியா விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட அணிக்கு 08 பேர் கொண்ட 04 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, சின்னப்பாலமுனை சுப்பர் ஓகிட் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.
ஹபிபியா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.கே நழீம் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று ஹபிபியா மற்றும் நிந்தவூர் லிபியா ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய ஹபிபியா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 04 ஓவர்கள் முடிவில் 32 ஓட்டங்களைப் பெற்றனர்.
33 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லிபியா அணியினர் 04 ஓவர்கள் முடிவில் 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டனர்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட ஹபிபியா அணிக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரண்டாமிடத்தைப் பெற்ற லிபியா அணிக்கு 20,000 ரூபாய் பணப்பரிசும் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

47 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
8 hours ago